தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாவட்ட போட்டி; 10 நாள் நடத்த ஆயத்தம்

மாவட்ட போட்டி; 10 நாள் நடத்த ஆயத்தம்

மாவட்ட போட்டி; 10 நாள் நடத்த ஆயத்தம்


ADDED : அக் 05, 2025 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2025 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், பள்ளி கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் தனிநபர், குழு விளையாட்டுகளில் திறமையான வீரர், வீராங்கனையரை தேர்வு செய்ய, குறுமைய, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்ட அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் நாளை (6ம் தேதி) துவங்குகிறது.

திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளியில் செஸ் போட்டி, 6ல் நடக்கிறது. 7ம் தேதி டீ பப்ளிக் பள்ளியில் டேபிள் டென்னிஸ், புல்வெளி டென்னிஸ் போட்டி, உடுமலை சார்க் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஸ்குவாஷ் நடக்கிறது. 15 வேலம்பாளையம், டிரிக் அகாடமியில், வரும், 8ம் தேதி இருபாலருக்கான நீச்சல், நிப்ட்-டீ கல்லுாரியில் மாணவியர் டேக்வாண்டோ போட்டி நடக்கிறது. இதே கல்லுாரியில், 9ம் தேதி, மாணவர் டேக்வாண்டோ போட்டி, நஞ்சப்பா பள்ளியில் மாணவ, மாணவியர் கேரம், சிக்கண்ணா கல்லுாரியில் சைக்கிளிங் போட்டிகள் நடத்தப்படுகிறது.

வரும், 10ம் தேதி ஜிம்னாஸ்டிக்ஸ் - நஞ்சப்பா பள்ளியில், அதே நாளில் சிலம்பம் 'நிப்ட் - டீ' கல்லுாரியில் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us