/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10ம் வகுப்பு தேர்ச்சியில் பின் தங்கும் மாவட்டம்
/
10ம் வகுப்பு தேர்ச்சியில் பின் தங்கும் மாவட்டம்
ADDED : மே 18, 2025 05:50 AM
ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து பின் நோக்கி செல்வது, கவலை அளிப்பதாக கல்வியா-ளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், பத்தகாம் வகுப்பு பொதுத்தேர்வில், 2014ல் 97.85 சதவீதம், 2015ல் 98.04 சதவீதம், 2016ல் 98.48 சதவீதம் பெற்று மூன்று முறை மாநிலத்தில் முதலிடம் பிடித்தது.அதன் பின், 2017ல் 97.97 சதவீதம் பெற்று நான்காமிடம், 2018ல் 98.38 சதவீதம் பெற்று இரண்டாமிடம், 2019ல் 98.41 சத-வீதம் பெற்று நான்காமிடம் பிடித்தது.
கொரோனாவால் 2020, 2021ல் தேர்வு இல்லை. 2022ல் 91.11 சதவீதம் பெற்று, 17வது இடம், 2023ல், 94.53 சதவீதம், 2024ல் 95.08 சதவீதம் பெற்று ஏழாவது இடம் பிடித்தது. இந்தாண்டு மீண்டும் ஏழாமிடம் பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், 96 சதவீதம் பெற்று, 11வது இடத்துக்கு தள்ளப்பட்-டுள்ளது. தேர்ச்சி சதவீதத்தில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து பின்னோக்கி செல்கிறது. மேல்நிலை பொதுத்தேர்வுக்கு மட்டு-மின்றி உயர்நிலை பொதுத்தேர்விலும், தேர்ச்சி விகிதத்திலும் உரிய கவனத்தை செலுத்த, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்-ளனர்.