ADDED : நவ 16, 2024 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட திட்டக்குழு கூட்டம் மாவட்ட திட்டக்குழு தலைவர் மற்றும் மாவட்ட பஞ்., தலைவர் நவமணி தலை-மையில் நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடு சீரமைத்தல், தனி நபர் கழிப்பறை, கிராமசாலை மேம்பாட்டு திட்டம் உட்பட அனைத்து துறை சார்பிலான திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். மாவட்ட பஞ்., தலைவர் தலைமையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கோரிக்கை மனு பற்றி விவாதிக்கப்பட்டது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், கூடுதல் கலெக்டர் சதீஸ், மாநகராட்சி ஆணையர் மணீஷ், மாவட்ட பஞ்., துணை தலைவர் கஸ்துாரி உட்பட பலர் பங்கேற்-றனர்.

