ADDED : செப் 17, 2025 01:30 AM
ரோடு, ஈரோடு
மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல்
நேற்றிரவு வரை ஜவுளிச்சந்தை நடந்தது. சாலையோர கடைகள், வாகனம்,
குடோன்களில் வைத்து விற்பனை மற்றும் வழக்கமான கடை, மார்க்கெட்களில்
ஜவுளி அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தது.
தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா,
மஹாராஷ்டிரா மாநில மக்கள், வியாபாரிகள், கடைக்காரர்கள் அதிகம்
வந்திருந்தனர். கடைக்காரர்கள், வியாபாரிகள் மட்டும் மொத்த
விற்பனைக்கு ஆர்டர் வழங்கினர். பொதுமக்கள், சிறிய வியாபாரிகள்
சில்லறையாக ஜவுளிகளை அதிகமாக வாங்கினர்.
இதுபற்றி ஈரோடு கனி
மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர்
நுார்சேட் கூறியதாவது: தீபாவளிக்காக மும்பை, சூரத், பெங்களுரு
உட்பட பல பகுதிகளில் இருந்தும் விதவிதமாக ஆடைகள் வாங்கி
வரப்பட்டுள்ளன. கொங்கு மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும்
துணிகளும் வரத்தாகி விட்டன. தீபாவளி வரை தொடர்ந்து வரத்தாகும்.
தீபாவளிக்கான சில்லறை விற்பனையே துவங்கி உள்ளது. மொத்த விற்பனை,
20, 25ம் தேதிக்கு பின் துவங்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு
கூறினார்.