ADDED : மே 12, 2025 03:21 AM
காங்கேயம்: காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க.,வுக்கு உட்பட்ட படியூரில், தி.மு.க.,வின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்-தது. காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் கோவை நல்லதம்பி சிறப்புரையாற்-றினார்.
இதேபோல் வெள்ளகோவில், தீர்த்தாம்பாளையத்தில், சாதனை விளக்க பொதுக்கூட்டம், நகர செயலாளர் முருகானந்தம் தலை-மையில் நடந்தது. தலைமை கழக பேச்சாளர் சஹா விக்னேஷ், அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் சந்தி-ரசேகரன், காங்கேயம் நகர செயலாளர் சேமலையப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணைபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்-டர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.