தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தி.மு.க., வேட்பாளர்கள் விபரம்

தி.மு.க., வேட்பாளர்கள் விபரம்

தி.மு.க., வேட்பாளர்கள் விபரம்


ADDED : மார் 29, 2026 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 02:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு மேற்கு

பெயர் : சு.முத்துசாமி

வயது : 77

படிப்பு : எம்.ஏ.,

ஜாதி : கொங்கு வேளாள

கவுண்டர்

தொழில்: விவசாயம்

குடும்பம்: மனைவி, ஒரு மகன் (மனைவி இறந்து விட்டார்)

அரசியல் அனுபவம்: கடந்த, 1977 முதல் 1980 வரை ஈரோடு தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,; 1980-1984, 1984-1987 வரை இருமுறை ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்று போக்குவரத்து அமைச்சர். 1991-96ல் பவானி தொகுதியில் வெற்றி; சுகாதார துறை அமைச்சர். 2010ல் தி.மு.க.,வில் இணைந்து உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரானார். 2011ல் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி. 2015ல் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரானார். 2016ல் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி. 2021ல் ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார்.

கிடைத்தது எப்படி: சிட்டிங் எம்.எல்.ஏ., அமைச்சர் என்பது மட்டுமின்றி முதல்வர், துணை முதல்வருக்கு தொந்தரவு இல்லாத கூடுதல் பொறுப்பு அமைச்சராகவும் இருந்தவர். அதுமட்டுமின்றி கட்சியில், ஆட்சியில் சீனியர் என்பதாலும், வாய்ப்பு கிடைத்தது.

காங்கேயம்

பெயர் : மு.பெ.சாமிநாதன்

வயது : 61

படிப்பு : பி.ஏ.,

ஜாதி : கொங்கு வேளாள கவுண்டர்.

தொழில் : விவசாயம், அரசியல்

வாதி

குடும்பம் : மனைவி, ஒரு மகன்,

ஒரு மகள்.

அரசியல் அனுபவம் : கடந்த, 1986 வெள்ளகோவில் ஒன்றிய இளைஞர்அணி துணை அமைப்பாளர். 1993ல் ஈரோடு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். 2000ல் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர். 1996, 2001, 2006 தேர்தல்களில் தொடர்ந்து வெள்ளகோவில் தொகுதியில் வெற்றி. 2003ல் மாநில இளைஞரணி செயலாளர். 2006-11ல் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர். 2008ல் திருப்பூர் மாவட்ட செயலாளர். 2011ல் மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி. 2015ல் மாநில இளைஞரணி இணை செயலாளர். 2016ல் திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி. 2017ல் மாநில இளைஞரணி செயலாளர். 2019ல் உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர். 2020ல் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர். 2021 காங்கேயம் தொகுதியில் வெற்றி, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், மாநில துணை பொதுச்செயலாளர்.

கிடைத்தது எப்படி : கட்சி தலைமைக்கு நெருக்கமானவர். தீவிர களப்பணியாளர். தொடர் அனுபவத்தால் வாய்ப்பு.

கோபி

பெயர் : நல்லசிவம்

வயது : 54

படிப்பு : டி.எம்.இ.,

ஜாதி : கொங்கு வெள்ளாள

கவுண்டர்

தொழில் : விவசாயம், நாட்டு

சர்க்கரை வியாபாரம்

குடும்பம்: மனைவி, ஒரு மகன்.

அரசியல் அனுபவம்: கடந்த, 1980ல், தி.மு.க.,வில் இணைந்து, இளைஞரணியில் பணியாற்றினார். கடந்த, 1984ல் கவுந்தப்பாடி பஞ்., சின்னியம்பாளையம் கிளை அமைப்பாளர்; 1990-2003 வரை, பவானி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்; 2003-2015 பவானி ஒன்றிய செயலாளர்; 2006-2011ல் பவானி யூனியன் சேர்மன்; 2015 முதல் தற்போது வரை, ஈரோடு தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

கிடைத்தது எப்படி: இவருடைய தந்தை நல்லசாமி, 1967ல் தி.மு.க., உறுப்பினராகி, 2019ல் அவர் மறையும் வரை, எந்த பொறுப்பும் வகிக்காமல் கட்சி பணியாற்றியனார். அதேசமயம் தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, நல்லசிவம் நன்கு அறிமுகமானவர். இதனால் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்தியூர்

பெயர் : எம்.சிவபாலன்

வயது : 42

படிப்பு : பி.காம்.,

ஜாதி : கொங்கு வெள்ளாள

கவுண்டர்.

தொழில் : விவசாயம் மற்றும்

ஹார்டுவேர்

அரசியல் அனுபவம்: கடந்த, 2010ல் கட்சி உறுப்பினர். 2013 ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர். 2015 மாவட்ட மாணவரணி அமைப்பாளர். 2018 டி.என்.பாளையம் ஒன்றிய பொறுப்பாளர். 2022 முதல் தற்போது வரை டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர்.

கிடைத்தது எப்படி: கள்ளிப்பட்டியில் கருணாநிதியின் முழு உருவச்சிலை அமைத்ததில் முக்கிய பங்கு. டி.என்.பாளையம் மக்கள் மத்தியில் செல்வாக்கு. அரசியல் அனுபவம் மிக்கவர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் நெருக்கமானவர் என்பதும் கூடுதல் காரணம்.

பெருந்துறை

பெயர் : தோப்பு வெங்கடாச்சலம்

வயது : 62

படிப்பு : பி.ஏ.,

தொழில் : விவசாயம்

ஜாதி : கொங்கு வேளாள

கவுண்டர்

குடும்பம் : மனைவி, ஒரு மகன்

அரசியல் அனுபவம்: கடந்த, 2011, 2016 ல் பெருந்துறை எம்.எல்.ஏ., 2012--2016 வரை வருவாய் துறை மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர். 2021ல் திமுக.,வில் இணைந்தார். தற்போது ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக உள்ளார்.

கிடைத்தது எப்படி: பெருந்துறை தொகுதியில் தொடர்ந்து அ.தி.மு.க., வெற்றி பெற்று வந்துள்ளது. தி.மு.க., இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. இந்த அடிப்படையிலும், தொகுதியில் அரசியல் அனுபவம் பெற்ற, மக்களிடம் நன்கு அறிமுகமானவர் என்ற அடிப்படையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பவானி

பெயர் : கே.ஏ.சந்திரசேகர்

படிப்பு : டிப்ளமோ ஆட்டோ

மொபைல் இன்ஜினியரிங்

தொழில் : கேபிள் டிவி

நெட்வொர்க்

ஜாதி : வன்னியர்

குடும்பம் : மனைவி, ஒரு மகன்,

ஒரு மகள்

அரசியல் அனுபவம் : கடந்த, 1990 முதல் கட்சி அடிப்படை உறுப்பினர். பவானி இளைஞரணி துணை அமைப்பாளராக, 10 ஆண்டு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக நான்காண்டுகள் பதவி வகித்தார். தற்போது பவானி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

கிடைத்தது எப்படி: 1957 முதல் தி.மு.க., பாரம்பரிய குடும்பம். அ.தி.மு.க.,வில் கருப்பணன் எம்.எல்.ஏ.,வாக உள்ள நிலையில், அவருக்கு இணையாக, தொகுதியில் பாதியளவில் வன்னியர் சமுதாயம் இருப்பதாலும், கருப்பணனுக்கு சமமாகவும், தொகுதி மக்களிடம் நல்லமுறையில் பழக கூடியவர் என்ற அடிப்படையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தாராபுரம் (தனி)

பெயர் : எஸ்.இந்திராணி

வயது : 65

ஜாதி : அருந்ததியர்

படிப்பு : எம்.பி.பி.எஸ்.,

டி.சி.ஹெச்.

தொழில் : குழந்தைகள் நலம் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்.

குடும்பம் : கணவர் ஓய்வு மின்வாரிய பொறியாளர். ஒரு மகன் (விஞ்ஞானி), ஒரு மகள் (அரசு மருத்துவர், தாராபுரம்).

அரசியல் அனுபவம்: மாவட்ட தி.மு.க., மருத்துவர் அணி தலைவராக உள்ளார். தி.மு.க., நடத்திய பல்வேறு ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

கிடைத்தது எப்படி: இவரது சகோதரி மருத்துவர் சாந்தகுமாரி, 1989 முதல் 91 கால கட்டத்தில் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். அந்த வகையிலும், பாரம்பரிய தி.மு.க., குடும்பத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us