ADDED : ஜூலை 20, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி ஆலோசனை கூட்டம், ஈரோடு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமையில் நடந்தது. அமைச்சர் முத்துசாமி பேசினார்.
'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்துக்கு வீடுவீடாக சென்று மத்திய அரசின் மாறுபட்ட செயல்பாடுகளை தெரிவித்து, உறுப்பினராக இணைக்க வேண்டும். இப்பணிகளை அனைத்து நிலை நிர்வாகிகள் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டு கொண்டனர். முன்னதாக ஈரோடு மேற்கு தொகுதிக்கு மேட்டுக்கடையிலும், மொடக்குறிச்சி தொகுதிக்கு மொடக்குறிச்சியிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

