/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்
/
தி.மு.க., கவுன்சிலர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 18, 2024 01:26 AM
பவானி, டிச. 18-
அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி சாதாரண கூட்டம், தலைவர் தி.மு.க.,வை சேர்ந்த வேலுசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 15 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும், முதலாவதாக பிறப்பு இறப்பு சான்றிதழ் சம்பந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, பேரூராட்சிக்கு தேவையான வளர்ச்சித் திட்டம் தொடர்பான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. பின்னர் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு தலைவர் பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் எனக்கூறியும், தங்களது வார்டுகளுக்கு வளர்ச்சி நிதியை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கூறி, கவுன்சிலர்கள் பெரியசாமி, பழனியம்மாள், ஜெயக்கொடி, அனிதா உள்ளிட்ட ஒன்பது தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, கூச்சல் குழப்பத்துக்கிடையே, எந்த பதிலும் கூறாமல் தலைவர் வேலுசாமி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். இந்நிலையில், ஒன்பது கவுன்சிலர்களும், மூன்று மணி நேரத்துக்கும் மேலாக, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், ஒலகடம் செயல் அலுவலர் சிவகாமியிடம் (பொறுப்பு) கோரிக்கை மனுவை வழங்கினர்.