பொது வாழ்க்கைக்கு முடிவுரை தி.மு.க., நிர்வாகி சோக பதிவு
பொது வாழ்க்கைக்கு முடிவுரை தி.மு.க., நிர்வாகி சோக பதிவு
ADDED : மார் 31, 2026 06:04 AM
ஈரோடு, மொடக்குறிச்சியை சேர்ந்தவர் சச்சிதானந்தம், 69; தி.மு.க., நெசவாளரணி செயலாளர். இம்முறை சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால் கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த, 2016 தேர்தலில் இதே தொகுதியில் சச்சிதானந்தம் போட்டியிட்டு, குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இதனால் இம்முறை சீட் பெற தீவிர முயற்சி மேற்கொண்டிருந்தார். ஆனால், வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது. இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில், '50 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுகள்' என குறிப்பிட்டுள்ளார். சச்சிதானந்தத்தின் இந்த பதிவு, தி.மு.க.வினரிடையே வைரலாகி வருகிறது. இப்பதிவு தங்களுக்கும் பொருந்துவதாக தி.மு.க., நிர்வாகிகள் பலரும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றுள்ளனர்.
