/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம்; சீமா
/
தி.மு.க., என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம்; சீமா
தி.மு.க., என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம்; சீமா
தி.மு.க., என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம்; சீமா
ADDED : ஏப் 11, 2024 07:34 AM
சென்னிமலை : ஈரோடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட, சென்னிமலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், ஈரோடு வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து, ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
பா.ஜ., - காங்கிரஸ், திராவிட கட்சிகள் இவை தமிழ் பேரினத்திற்கு எதிரானது. ஹிந்தியை திணிக்கும் போது நாம் எதிர்த்தோம். தற்போது ஹிந்திக்காரர்களை திணிக்கிறார்கள். தெருவிற்கு இரண்டு மதுக்கடைகள் திறந்து வைத்து தமிழன் குடிக்கிறான், வேலை செய்ய மாட்டான் என கூறி ஹிந்திக்காரனை கொண்டு வந்து தமிழகத்தில் திணிக்கின்றனர். சாராயக்கடை நடத்துவதற்கு ஒரு ஆட்சியா, ஒரு அரசா?
பத்து ஆண்டுகள் ஆண்ட மோடி, இனி ஐந்து ஆண்டுகள் ஆண்டு என்ன செய்ய போகிறார். நீட், ஜி.எஸ்.டி., கொண்டு வந்தது காங்கிரஸ், உடன் இருந்தது தி.மு.க., இந்த திட்டங்களை வளர்த்தது பா.ஜ., இன்னும் ஒரு முறை பா.ஜ.,விற்கு ஓட்டளித்தால் இந்தியா இருக்காது. அதானி, அம்பானியிடம்தான் நாடு இருக்கும். 1,000 ரூபாய் தரும் அரசு, துாய தண்ணீரை ஏன் கொடுப்பதில்லை.
யுகாதி, ஓணம், மகாவீர் ஜெயந்தி, தமிழகத்தில் விடுமுறை அளிக்கும் நிலையில் தமிழ் புத்தாண்டு, பொங்கலுக்கு இந்தியாவில் எங்கும் விடுமுறை இல்லை. இந்தியமும், திராவிடமும் வெவ்வேறு அல்ல. தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரிகள். திருடர்களின் முன்னேற்ற கழகம் தான் தி.மு.க., அனைத்திந்திய திருடர்கள் முன்னேற்றக்கழகம் தான்
அ.தி.மு.க..
இவ்வாறு பேசினார்.

