தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கறுப்புக்கொடி ஏற்றி தி.மு.க., எதிர்ப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கறுப்புக்கொடி ஏற்றி தி.மு.க., எதிர்ப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கறுப்புக்கொடி ஏற்றி தி.மு.க., எதிர்ப்பு


ADDED : ஏப் 17, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 05:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு : மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தது. அதற்கு தி.மு.க., உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, தங்களது மாநிலத்தின் சட்டசபை, லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக வீடு, கடைகளில் கருப்பு கொடியேற்ற, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதன்படி ஈரோட்டில் தி.மு.க.,வினர் வீடு, கடைகளில் நேற்று கருப்பு கொடியேற்றினர். ஈரோடு பெரியார் நகரில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வீட்டின் முன் அமைச்சர் உள்ளிட்ட தி.மு.க.,வினர், மசோதா நகலை தீயிட்டு எரித்தனர்.

பெருந்துறையில் ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக் கொடியேற்றி, நகலை எரித்தும் போராட்டம் நடத்தினர். அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் தி.மு.க., நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன் கருப்பு கொடி கட்டியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

* காங்கேயத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், அமைப்பினர், தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர். காங்கேயத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியாரின் பெண்கள் அமைப்பினர், நகராட்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us