தி.மு.க., டேபிள் காலண்டர்கள் கோபியில் 18 ஆயிரம் பறிமுதல்
தி.மு.க., டேபிள் காலண்டர்கள் கோபியில் 18 ஆயிரம் பறிமுதல்
ADDED : ஏப் 10, 2026 03:05 AM
கோபி: கோபி அருகே தாழ்குனி ரவுண்டானா பகுதியில், கோபி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும்படை குழுவினர் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த டாடா ஏஸ் என்ற சரக்கு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர்.
கோபியை சேர்ந்த சந்தோஷ், 19, ஓட்டி வந்திருப்பது தெரியவந்தது. கரட்டூரில் உள்ள தி.மு.க., மாவட்ட கட்சி ஆபீசில் இருந்து, நம்பியூரில் உள்ள தி.மு.க., கட்சி ஆபீசுக்கு, டேபிள் காலண்டர் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. 150 பண்டல்களில், தலா 125 டேபிள் காலண்டர் என, 18 ஆயிரத்து 750 டேபிள் காலண்டர் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின், கோபி தாலுகா ஆபீசுக்கு அனுப்பி வைத்தனர்.* கோபி, கொளப்பலுார் அருகே தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வேலுார் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த மோகனசுந்தரம், 25, பொலீரோ பிக் அப் வாகனத்தில் வந்தார். சோதனையிட்டபோது சென்னையில் தனியார் அச்சகத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான, உரிய ஆவணமின்றி திருப்பூர் பள்ளிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்த, 3,000 வழிகாட்டுதல் புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.
