தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தபால் ஓட்டில் தி.மு.க., முதலிடம்

தபால் ஓட்டில் தி.மு.க., முதலிடம்

தபால் ஓட்டில் தி.மு.க., முதலிடம்


ADDED : மே 06, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:தபால் ஓட்டில் எப்போதும் போல் தி.மு.க., முதலிடம் பெற்றது.

ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், போலீசார், ராணுவ வீரர்கள் போன்ற சேவை பணிகளில் ஈடுபடுவோர் என, 21,556 தபால் ஓட்டுகள் பதிவானது.

பொதுவாக அரசு ஊழியர் உட்பட தபால் ஓட்டுக்கள், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கே பதிவாகும் என்பது கருத்து. அதுபோல இம்முறையும் எட்டு தொகுதியிலும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களே அதிக தபால் ஓட்டுக்களை பெற்றனர்.

ஈரோடு கிழக்கில் பதிவான, 1,333 தபால் ஓட்டில், காங்., கோபிநாத்-454, த.வெ.க., விஜய் பாலாஜி-363, அ.தி.மு.க., மனோகரன்-279 ஓட்டு பெற்றனர்.

ஈரோடு மேற்கில், 2,320 தபால் ஓட்டில், தி.மு.க., முத்துசாமி-958, பா.ஜ., யுவராஜா-519, த.வெ.க., ஆனந்த்மோகன்-472 ஓட்டுகள்;

மொடக்குறிச்சியில், 3,298 தபால் ஓட்டில், தி.மு.க., செந்தில்நாதன் - 1,247, பா.ஜ., கிருத்திகா-979, த.வெ.க., சண்முகன்-737 ஓட்டு;

பெருந்துறை தொகுதியில், 2,457 தபால் ஓட்டில், தி.மு.க., தோப்பு வெங்கடாசலம்-947, அ.தி.மு.க., ஜெயகுமார், 894, த.வெ.க., அருணாசலம்-453 ஓட்டு;

பவானி தொகுதியில் பதிவான, 3,190 தபால் ஓட்டில், தி.மு.க., சந்திரசேகர்-1,181, அ.தி.மு.க., கருப்பணன்-1,125, த.வெ.க., பாலகிருஷ்ணன்-663 ஓட்டு;

அந்தியூர் தொகுதியில் பதிவான, 3,022 தபால் ஓட்டில், தி.மு.க., சிவபாலன்-1,142, அ.தி.மு.க., ஹரிபாஸ்கர்-759, த.வெ.க., விஜய் வெங்கடேஷ்-464 ஓட்டு;

கோபியில் பதிவான, 3,079 தபால் ஓட்டில், தி.மு.க., நல்லசிவம் -1,059, த.வெ.க., செங்கோட்டையன்-984, அ.தி.மு.க., பிரபு-572 ஓட்டு; பவானிசாகரில் பதிவான, 2,505 தபால் ஓட்டில், இந்திய கம்யூனிஸ்ட் பி.எல்.சுந்தரம், 929, அ.தி.மு.க., பண்ணாரி-706, த.வெ.க., தமிழ்செல்வி-512 ஓட்டுகள் பெற்றனர்.

கடந்த தேர்தல்களில் தபால் ஓட்டுக்களில் பெரும்பாலான ஓட்டை, தி.மு.க.,வும், அடுத்ததாக, அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களே பெறுவர்.

இம்முறை த.வெ.க., வேட்பாளர்கள், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை தட்டி சென்றனர். ஆனாலும் எட்டு தொகுதியிலும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களே அதிக ஓட்டுக்களை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us