ADDED : மார் 19, 2026 04:41 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரத்தில், தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார். உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில்,' தாராபுரம், காங்கேயம் இரு தொகுதிகளிலும் வேட்பாளராக நிற்பது, முதல்வர் ஸ்டாலின் தான் என எண்ணி, தீவிரமாக பணிபுரிய வேண்டும்' என்றார். இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், சட்டசபை தொகுதி பார்வையாளர் கணேஷ் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நிர்வா-கிகள் பங்கேற்றனர்.
