தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாட்டி வதைக்கும் வெயில்; டாக்டர்கள் தற்காப்பு அறிவுரை

வாட்டி வதைக்கும் வெயில்; டாக்டர்கள் தற்காப்பு அறிவுரை

வாட்டி வதைக்கும் வெயில்; டாக்டர்கள் தற்காப்பு அறிவுரை


ADDED : மே 04, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 03:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இன்று அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. ஏற்கனவே வெயில் சுட்டெரித்து உடல் ரீதியான பிரச்னைகளை அனுபவித்து வரும் மக்கள், அக்னி நட்சத்திர வெயிலால் என்னென்ன பாதிப்புகள் உடலில் ஏற்படுமோ என்று, அச்சத்தின் பிடியில் உள்ளனர். வெப்பத்தின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:

கோடை காலத்தில் சிறுநீர் தொற்று, அம்மை நோய், செரிமான பிரச்னை, வயிற்று கோளாறு, தொண்டை அழற்சி, சரும நோய்கள் என பல்வேறு பிரச்னை ஏற்படும்.

முதியோர்களுக்கு வெயிலால் உடல் பலவீனமாகி, ஹீட் ஸ்டிரோக் வரலாம். நடுத்தர வயதினருக்கு சிறுநீரக பிரச்னைகளும், குழந்தைகளுக்குத் தொண்டையில் பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கோடைக்காலம் என்பதால் அதிக வியர்வை மற்றும் அளவுக்கதிகமாக சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீர் வறட்சி ஏற்படும். அதை தவிர்க்க இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்ற இயற்கை பானங்களை அருந்தவேண்டும். தர்பூசணி, வெள்ளரி பழங்களை சாப்பிடலாம். கோடைக்காலத்தில் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்சர் பிரச்னைகள் பலருக்கும் ஏற்படும். இவற்றை சரிசெய்ய நார்ச்சத்து அதிகமுள்ள முழுதானிய உணவுகள், காய்கறிகள், பருப்பு வகைகள், நீர்ச்சத்து நிறைந்த பழவகைகளை அதிகம் சாப்பிடவேண்டும்.

இருவேளை குளியல்

அதிகம் வியர்க்கும் என்பதால் காலை, இரவு என இருவேளை கட்டாயம் குளிக்கவேண்டும். சூரிய ஒளியில் இருக்கும் புறஊதாக் கதிர்களால் சருமத்தில் அரிப்பு ஏற்படும். பகலில் வெளியே செல்லும்போது, முகம் மற்றும் கைகளை துணிகளால் மூடியபடி செல்வது நல்லது. தலையில் தொப்பி அணிந்துகொள்வது, குடை எடுத்து செல்வது நல்லது. வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வயதானவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கலாம். குழந்தைகள் மதிய வேளையில் வெயிலில் விளையாடுவதைத் தவிர்த்து மாலை நேரங்களில் விளையாடலாம்.

ஐஸ் வாட்டரை தவிருங்க

ஐஸ் வாட்டர் குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும். ஐஸ்கிரீமை தவிர்க்க வேண்டும். பிரிட்ஜில் வைத்த தண்ணீரையும் தவிர்க்க வேண்டும்.

இது தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் வெப்பம் காரணமாக ஏற்படும் எந்தவொரு பிரச்னையையும் அலட்சியம் செய்ய வேண்டாம். இல்லாவிட்டால் அவை பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும். உடலில் மாற்றங்களோ, அறிகுறிகளோ தெரியவந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us