தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் பதிய முகாம்

வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் பதிய முகாம்

வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில் பதிய முகாம்


ADDED : மே 30, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களின் பணி நிலையை ஒழுங்குப்படுத்தவும், சமூக பாதுகாப்பு, பணி நிலையை முறைப்படுத்துதலுக்கு சட்டம் இயற்றப்பட்டது.

இதில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், வீட்டு பணியாளர் நலவாரியத்தில், www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு

செய்யலாம்.

இந்த அலுவலகத்தில் இணையம் சார்ந்த 'கிக்' தொழிலாளர்கள், வீட்டு பணி செய்யும் தொழிலாளர்களுக்கு அலுவலக நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.

வாரியத்தில் பதிவு செய்து கொண்டவர்கள், 5 ஆண்டுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி, ஓய்வூதியம் உட்பட பல சலுகைகள், உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இப்பதிவுக்கு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட போன், அசல் ஆதார் அட்டை, அசல் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணத்துடன், இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம்.

பதிவு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நலவாரிய அட்டையை உறுப்பினர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us