ADDED : அக் 09, 2026 04:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகர் மாவட்ட ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையிலான
ஹிந்து முன்னணியினர், ஈரோடு எஸ்.பி., கிரண் ஸ்ருதியிடம் அளித்த மனு:
ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் கல்யாண விநாயகர் கோவில்
இருந்தது. கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக கோவிலை இடித்து அகற்றினர்.
அதேசமயம்
புதிதாக கோவில் கட்டித் தருவதாக உறுதி தந்தனர். கூடுதல் கட்டடம்
கட்டும் பணி நிறைவு பெறும் தருணத்தை எட்டியுள்ளது. ஆனால் கோவில்
கட்டுமான பணி துவங்கவில்லை. இக்கோவில், 30 ஆண்டுக்கும் மேலாக
பழமையானது. விநாயகர் சிலையை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில்
கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
