தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பிளாஸ்டிக் கேரிபேக் தயாரிப்பு ஆலைக்கு இடம் வழங்காதீர்'

பிளாஸ்டிக் கேரிபேக் தயாரிப்பு ஆலைக்கு இடம் வழங்காதீர்'

பிளாஸ்டிக் கேரிபேக் தயாரிப்பு ஆலைக்கு இடம் வழங்காதீர்'

1


ADDED : அக் 06, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2026 05:33 AM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறி-யப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள், பிற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உரிமையாளர்கள், அத்தொழிற்சாலைக்கு வளா-கங்களை வாடகைக்கு விடும் நில உரிமையாளர்-களும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஆலை கண்டறியப்பட்டால், தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கட்ட-டத்துக்கு, கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தொழிற்சாலை வளாகம், இயந்திர தளவாடங்-களும் ஓராண்டுக்கு சீலிடப்படும். இதுபோன்ற ஆலைக்கு தங்கள் நிலம், கட்டடம், ஆலை வளா-கத்துக்கு, நில உரிமையாளர்கள் அனுமதி தரக்க்-கூடாது என்று,. கலெக்டர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.

காங்., ராகுலுடன் உரையாட

மாணவர்களுக்கு அழைப்பு

ஈரோடு, அக். 6

காங்., தேசிய செயலர் நிவேதிக் ஆல்வா, ஈரோட்டில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தேசிய அளவில் மாணவர்கள் கல்வி முறை, தேர்வு, கல்வி, தேர்வு கட்டணம், டியூஷன் கட்-டணம் என பல பிரச்னைகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மாணவர்கள் மூலம் இதனை அறிய எம்.பி., ராகுல், தேசிய அளவில் மாணவர்களிடம் கருத்து, குறை கேட்டறிகிறார். சமீபத்தில் புனேவில் நடந்த 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில், ஆயிரக்க-ணக்கான மாணவர்கள் தங்கள் கருத்து, புகார்-களை தெரிவித்தனர்.

தென்மாநில அளவில் தமிழகத்தில் வரும், 10ல் சென்னை தீவுத்திடலில் இதேபோன்ற நிகழ்ச்-சியில் எம்.பி., ராகுல் பங்கேற்று, மாண-வர்களுடன் உரையாடுகிறார். விருப்பமுள்ள-வர்கள், தங்கள் பெயர்களை பதிவு செய்து பங்கேற்கலாம்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us