/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளாஸ்டிக் பொருட்களை சாக்கடையில் வீசாதீர்கள்
/
பிளாஸ்டிக் பொருட்களை சாக்கடையில் வீசாதீர்கள்
ADDED : டிச 03, 2025 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம்
நகராட்சியில், 18 வார்டுகளில், 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீர், குளிர்பானங்களை
குடித்து விட்டு, பாட்டில்களை சாக்கடையில் வீசுவது சமீபமாக
அதிகரித்து விட்டது.
இதனால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி, கொசுத்தொல்லை அதிகரித்து, சுகாதார சீர்கேடும் அதிகரிக்கிறது.
பிளாஸ்டிக்
பொருட்களை சாக்கடைகளில் வீச வேண்டாம். வீடுகளில் வைத்திருந்து
துப்புரவு பணியாளர்களிடம் வழங்கி ஒத்துழைப்பு தருமாறு,
நகராட்சிக்கு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

