/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்துணவு மையங்களுக்கு டபுள் பர்னர் காஸ் அடுப்பு
/
சத்துணவு மையங்களுக்கு டபுள் பர்னர் காஸ் அடுப்பு
ADDED : அக் 08, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் சத்துணவு கூடங்களில், ஈரோடு மாவட்டத்தில் முழு அளவில் காஸ் ஸ்டவ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது.
பல மையங்களில் அடுப்பு பழுதாகி, 350 பள்ளிகளில் கடந்த ஆண்டு அடுப்பு மாற்றப்பட்டது. நடப்பாண்டு பழுதான மற்றும் பழைய அடுப்பாக உள்ள, 800 மையங்களுக்கு, இரட்டை பர்னருடன் புதிய காஸ் ஸ்டவ் அடுப்பு வழங்கப்படவுள்ளது. இதுவரை ஈரோடு யூனியன் பகுதி மையங்களுக்கு, 74 அடுப்பு வந்துள்ளது.
'அனைத்து அடுப்புகளும் இன்னும், 10 நாட்களுக்குள் ஒப்படைக்கப்பட்டு விடும். இதன் மூலம் விரைவாக, பாதுகாப்பாக சமைக்க இயலும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.