ADDED : மே 09, 2026 04:24 AM
அ நிறம் | அளவு
கோபி, கோபி அருகே மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வில், 97 சதவீத தேர்ச்சி பெற்றது. பள்ளியில் நா.உடையாம்பாளையத்தை சேர்ந்த இரட்டையர் அருண்குமார் மற்றும் அசோக்குமார், பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தனர்.
அருண்குமார், 470 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாமிடம், அசோக்குமார், 465 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். இரட்டையரை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
