தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பருவமழைக்கு முன் வடிகாலை துார்வார அமைச்சர் உத்தரவு

பருவமழைக்கு முன் வடிகாலை துார்வார அமைச்சர் உத்தரவு

பருவமழைக்கு முன் வடிகாலை துார்வார அமைச்சர் உத்தரவு


ADDED : செப் 13, 2026 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 07:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாநகராட்சி, வருவாய், பேரிடர் மேலாண்மை, நெடுஞ்சாலை, மின்வாரியம், பொதுப்பணித்துறைகள் சார்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். கைத்தறித்துறை அமைச்சர் விஜய்பாலாஜி ஆய்வு செய்தார்.

நெடுஞ்சாலை துறை சார்பில் பவானி - ஈரோடு வரை நடந்து வரும் சாலை பணிகள், ஈரோடு - சென்னிமலை சாலை, ஈரோடு - கரூர் சாலை, ஈரோடு - பெருந்துறை சாலையில் நடந்து வரும் விரிவாக்கப்பணிகள், பாசூர், கொடுமுடியில் ரயில்வே மேம்பாலங்கள் விரைந்து அமைக்க யோசனை தெரிவிக்கப்பட்டது.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீரேற்று நிலையங்களுக்கு மின்பாதைகள் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, மாநகராட்சி பகுதியில் நெரிசலை குறைக்கவும், பருவமழை துவங்கும் முன் துார்வாரும் பணி, சாலை, மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

குறிப்பாக மாநகராட்சி பகுதியில் மழை நீர் வடிகால், வாய்க்கால் துார்வாரி, மழை நீர் தேங்காமல் செல்லும்படி செடி, புதர்களை அகற்ற யோசனை தெரிவித்தனர். முன்னதாக அசோகபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால் துார்வாருதல், புதர் செடிகளை அகற்றும் பணியை அமைச்சர் விஜய்பாலாஜி ஆய்வு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us