/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜி.பே., மூலம் வசூலித்த காவலர் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்
/
ஜி.பே., மூலம் வசூலித்த காவலர் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்
ஜி.பே., மூலம் வசூலித்த காவலர் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்
ஜி.பே., மூலம் வசூலித்த காவலர் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்
ADDED : ஜன 15, 2025 12:32 AM
காங்கேயம்,:
காங்கேயம் தாலுகா பகுதியில், கிராமங்களை இணைக்கும் நுாற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. சில மாதங்களாக சில போலீசார் கிராம சாலைகளில் நின்றுகொண்டு, பணி முடிந்து ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களின் வாகனங்களை மறித்து வசூலிப்பதாக புகார் எழுந்தது. கடந்த, 10ம் தேதி படியூர், ஒட்டபாளையம் அருகே கிராம சாலையில் இரவு போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி முடித்து வாகனங்களில் வீடு திரும்பியுள்ளனர்.
அங்கு நின்றிருந்த இரண்டு போலீார் வாகனங்களை நிறுத்தி, ஆவணங்களை கேட்டுள்ளனர். ஏதாவது ஒரு காரணம் கூறி, 5,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். பணம் இல்லை எனக் கூறியவர்களிடம், ஜி-பே செய்யுங்கள், இல்லையென்றால் வாகனத்தை எடுத்து சென்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த அவர்கள், வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செய்து பணத்தை ஏற்பாடு செய்து ஜி-பே செய்ய சொல்லியுள்ளனர். அதன் பிறகே போலீசார் வாகனங்களை தந்தனர்.
ஆனால் அபராதம் செலுத்தியதற்கான ரசீது வழங்கவில்லை. இதுகுறித்து திருப்பூர் எஸ்.பி., க்கு புகார் சென்றது. விசாரணையில் ஜி-பே மூலம், இரண்டாம் நிலை காவலர் கார்த்திகேயன் வசூலில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி., உத்தரவிட்டார்.