ADDED : மார் 21, 2026 06:23 AM

அ நிறம் | அளவு
ஈரோடு; மகளிர் குழுவினர், மக்கள் சார்பில் 'வாக்களிப்-பது உங்கள் உரிமை மற்றும் கடமை' என்ற வாக்-காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள், 100 சத-வீதம் வாக்களிப்போம் என்ற நோக்கில், 30க்கும் மேற்பட்ட கோலங்கள், சிறிய ஓவியங்கள் வரைந்திருந்தனர். தேர்தல் கருத்துக்கள் அடங்கிய வாசகங்கள், கோலம் மூலம் வரைந்திருந்தனர். சிறப்பாக போடப்பட்ட மூன்று கோலங்களுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. கலெக்டர் அலு-வலக வளாக 'செல்பி பாயிண்ட்டில்' விழிப்பு-ணர்வு போட்டோ எடுத்தனர். வாக்களிப்பது உங்கள் உரிமை என்று, வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின், கையெழுத்து இயக்கம் நடத்-தப்பட்டது. ஏப்., 23ல் ஓட்டுப்பதிவு நாள் என்பதை வலியுறுத்தும் மனித சங்கிலி நிகழ்த்தினர்.
