ADDED : பிப் 06, 2026 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை,: பெருந்துறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, டவுன் பஞ்., மற்றும் பஞ்., பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுகுறித்து பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., ஜெயக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் பஞ்., தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பலர், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் சரி வர பராமரிப்பு செய்யாமல், 200-க்கும் மேற்பட்ட மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படவில்லை. இதனால் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். இதுதொடர்பாக வரும், 16ம் தேதி கலெக்டரை சந்தித்து மனு தர முடிவு செய்தனர்.

