ADDED : ஏப் 19, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
அறச்சலுார்அறச்சலுார், வெள்ளியங்கிரி புதுாரை சேர்ந்தவர் தீனதயாளன், 33; இவரின் மனைவி செல்வி. தீனதயாளன் ஆயில் மில்லில் டிரைவராக பணியாற்றினார். மது குடிக்கும் பழக்கம் இருந்தது. பணம் கேட்டு தகராறு செய்ததில், மனைவி கோபித்து கொண்டு, ஓலவலசில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் தீன தயாளனை நாய் கடித்துள்ளது.
தீன தயாளன் நாய் கடிக்கு கடந்த, 16ல் ஊசி போட்டு கொண்டு, மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். மாலையில் உடல் நிலை சரியில்லை என்று கூறிய நிலையில் மயக்கமானார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி செல்வி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்., அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
