ADDED : மே 30, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம் ஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார், 55. இவர், ஈரோடு ரயில்வே கூட்ஸ் ெஷட்டில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று கூட்ஸ் ெஷட்டில் பாரம் ஏற்றி கொண்ட சசிகுமார், கூட்ஸ் ெஷட்டில் உள்ள எடை நிலையத்தில் எடை போட்டுள்ளார். பின், லாரியை அங்கிருந்து ஓரமாக நிறுத்துவதற்காக ஓட்டி சென்றார்.
ஓரமாக நிறுத்துவதற்காக டிரைவர் பக்கத்து கதவை சற்று திறந்தபடி ஓட்டி வந்த சசிகுமார், திடீரென மயங்கி லாரியில் இருந்து கீழே விழுந்தார்.கட்டுப்பாட்டை இழந்த லாரி, சில அடி துாரம் சென்று சுவரில் மோதி நின்றது. இதில் காயம் அடைந்த சசிகுமார், ஈரோடு அரசு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டார். வரும் வழியில் இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். ஈரோடு சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
