ADDED : மார் 19, 2026 04:36 AM
ஈரோடு: கிருஷ்ணகிரி மாவட்டம் எம்.ஜி பள்ளி கிராமத்தை சேர்ந்த மணி, 61, ஈரோடு லாரி டிரான்ஸ்போர்ட் டிரைவர். நேற்று முன்-தினம் ஈரோடு ராசாம்பாளையம் தனியார் நிறுவனத்திற்கு லாரியில் சரக்கு ஏற்றி வந்து, இறக்குவதற்காக காத்திருந்தார். அப்போது, குஜராத் மாநில பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரி சரக்கு இறக்கி விட்டு பின்னோக்கி வந்தது. லாரியின் பக்கவாட்டில் மணி நின்று கொண்டிருந்தார். லாரி எதிர்பாராவிதமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் மோதியது.
லாரியை தொட்டுக் கொண்டிருந்த மணி மீது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். பின்னோக்கி வந்த லாரியின் பின் சக்கரம் மணியின் இரண்டு கால்களில் ஏறியது. கைகளிலும் காயம் ஏற்பட்-டது. அங்கிருந்தவர்கள் மணியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ-மனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்து விட்டதாக டாக்-டர்கள் தெரிவித்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்-றனர்.
