ADDED : அக் 07, 2026 06:23 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே நடுப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 62; தனியார் கல்லுாரியில்
டிரைவர்.
இவர் கடந்த, 1ம் தேதி மதியம் கோபி அருகே ஒத்தக்குதிரை என்ற
இடத்தில், ஹீரோ ேஹாண்டா பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்து
பலத்த காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
நிலையில் சரவணன் இறந்தார். அவரின் தம்பி கார்த்திகேயன் புகாரின்படி,
கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.* திங்களூர் அருகே
மாடக்கிணற்றை சேர்ந்த விவசாயி நல்லசாமி, 68;
திங்களூர்-நல்லாம்பட்டி சாலையில் ஹீரோ ேஹாண்டா பைக்கில்
சென்றபோது தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தார். ஈரோடு தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இறந்தார்.
திங்களூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
