ADDED : ஆக 18, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்; அந்தியூரை அடுத்த பர்கூர்மலையை சேர்ந்தவர் சிவக்குமார், 21; டிரைவர். திருமணமானவர். இவர், 16 வயதான ஒன்பதாம் வகுப்பு மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். மாணவி தனது தாயிடம் கூறியதையடுத்து, பவானி மகளிர் போலீசில் புகாரளித்தார்.
விசாரித்த போலீசார் சிவக்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து, பவானி ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்
