ADDED : மார் 23, 2026 02:35 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன், 40; வாடகை வாகன ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து டூவீலரில் வீட்டுக்கு சென்றார்.
சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலை புதுரோடு அருகே சென்றபோது, முன்னால் சென்ற டாடா ஏஸ் வாகனத்தை முந்தினார். அப்போது சரக்கு வாகனத்தில் டூவீலர் மோதியது. இதில் முருகேசன் துாக்கி வீசப்-பட்டதில் தலையில் பலத்த காயமடைந்து பலியானார். விபத்து குறித்து புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
