/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜொமேட்டோ ஊழியரிடம்பணம் பறித்த போதை கும்பல்
/
ஜொமேட்டோ ஊழியரிடம்பணம் பறித்த போதை கும்பல்
ADDED : ஏப் 23, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்:தாராபுரம், உடுமலை ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார், 39. ஜொமேட்டோ நிறுவன ஊழியர். கடந்த, 20ம் தேதி இரவு, தச்சன்புதுார் சாலைக்கு உணவை வினியோகிக்க சென்றார். அப்போது ஆர்டர் செய்த நான்கு பேர், மது போதையில் இருந்துள்ளனர். ஏன் இவ்வளவு தாமதம் எனக்கேட்டு செந்தில்குமாரை தாக்கினர்.
அவரிடம் இருந்த செல்போன், 10 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு, விரட்டியுள்ளனர். செந்தில்குமார் புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

