ADDED : மார் 09, 2026 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்; வெள்ளகோவில் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்துக்கு, கடந்த வாரம், 5 டன் முருங்கை வரத்தானது. செடி முருங்கை கிலோ, 30 ரூபாய், மர முருங்கை, 40, கரும்பு முருங்கை, 50 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று, 13 டன் முருங்கை வரத்தானது. செடி முருங்கை, 20 ரூபாய், மர முருங்கை கிலோ, 20 ரூபாய், கரும்பு முருங்கை, 35 ரூபாய்க்கு விற்பனையானது. முருங்கை சீசன் துவங்கியுள்ளதால் விலை குறைந்து விட்டது. வரும் வாரங்களில் வரத்து அதிகரிக்கும் என்பதால், விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

