/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மது போதையில் கார் ஓட்டி விபத்து; டிரைவர் மீது வழக்கு
/
மது போதையில் கார் ஓட்டி விபத்து; டிரைவர் மீது வழக்கு
மது போதையில் கார் ஓட்டி விபத்து; டிரைவர் மீது வழக்கு
மது போதையில் கார் ஓட்டி விபத்து; டிரைவர் மீது வழக்கு
ADDED : அக் 03, 2024 06:55 AM
ஈரோடு: ஈரோட்டில், மது போதையில் தாறுமாறாக காரை ஒட்டி பல விபத்துகளை ஏற்படுத்திய, கார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை பறிமுதல் செய்தனர்.ஈரோடு, நாடார்மேடு காளியப்பகவுண்டர் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் யுவராஜ், 33. இவர், சொந்தமாக கார் வைத்து, கால் டாக்ஸியாக ஓட்டி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு தனது காரில் நாடார்-மேட்டில் இருந்து புறப்பட்டு, ரயில்வே ஸ்டேஷன் நோக்கி வந்தார்.
அப்போது வளைவில் காரை திருப்ப முயன்ற-போது, கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி, சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் மீது மோதி, சென்ட் விற்பனை செய்யும் கடை மீதும் மோதி, நின்று கொண்டி-ருந்த லாரியின் பின் பக்கம் மோதி நின்றது.விபத்தில் காரின் முன்பக்கம் கடும் சேதமடைந்-தது. சென்ட் கடையில், 1 லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் காயம் இன்றி தப்பிய யுவராஜை, சூரம்பட்டி போலீசார் பிடித்து விசாரித்தனர்.அதிகமான மது போதையில் இருந்த யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்தனர்.

