போதையில் தந்தை, சகோதரனைதாக்கிய பாசக்கார தம்பி கைது
போதையில் தந்தை, சகோதரனைதாக்கிய பாசக்கார தம்பி கைது
ADDED : மே 14, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டிபுன்செய் புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ், 62. இவரது மகன்கள் முத்துக்குமார், 33, கார்த்திக்குமார், 31. கடந்த, 11ம் தேதி தந்தை மற்றும் இரு மகன்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது மது போதையில் இருந்த கார்த்திக்குமார், தகராறில் ஈடுபட்டதோடு தந்தை, சகோதரன் முத்துக்குமார் ஆகியோரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தந்தை, மகன் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புன்செய் புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக்குமாரை நேற்று கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
