/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிபோதையில் அங்கன்வாடி பணியாளரை தாக்கியவர் கைது
/
குடிபோதையில் அங்கன்வாடி பணியாளரை தாக்கியவர் கைது
ADDED : ஆக 22, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த மாரனுாரை சேர்ந்தவர் வசந்தா மணி, 55; அங்கன்வாடி உதவியாளர். அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி, அங்கன்வாடியில் இருந்து தனது பேத்தியை வீட்டுக்கு அழைத்து செல்ல நேற்று சென்றார்.
குடிபோதையில் இருந்ததால் வசந்தாமணி அனுப்ப மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த வசந்தாமணி அளித்த புகாரின்படி சத்தி போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.