ADDED : ஜூலை 31, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மணிக்கூண்டு பகுதியில் 7-இ அரசு டவுன் பஸ், நேற்று மதியம் பயணிகளை
ஏற்றிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி சென்றது. அப்போது போதையில்
டூவீலரில் வந்த மூன்று இளைஞர்கள், அரசு பஸ்சுக்கு வழி விடாமல்
சென்றனர்.
இதனால் டிரைவர் ஹாரனை தொடர்ந்து அடித்தவாறு சென்றதால்,
சாலையை மறித்து டூவீலரை நிறுத்தினர். டிரைவர், கண்டக்டரை தகாத வார்த்தை
பேசி விட்டு தப்ப முயன்றனர். ஆனால் மூவரையும் சக பயணிகள் உதவியுடன்
பிடித்து, ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
