/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதையில் சாலையோரம் துாங்கியவர் விபத்தில் பலி
/
போதையில் சாலையோரம் துாங்கியவர் விபத்தில் பலி
ADDED : நவ 19, 2025 01:53 AM
அந்தியூர், அந்தியூர் அருகே பிரம்மதேசம் அடுத்த மாரிக் கவுண்டன் புதுாரை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 54; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, பிரம்மதேசம்புதுாரில் உள்ள டாஸ்மாக்கில் மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில், அதே பகுதியில் சாலையோரம் படுத்து விட்டார். கெட்டிசமுத்திரத்தை சேர்ந்த டிரைவர் பர்கத், 40, ஆப்பக்கூடலில் இருந்து ஆம்புலன்ஸில் நள்ளிரவு, 11 மணிக்கு வந்தார்.
அப்போது சுப்பிர மணியன் தலை மீது வாகனம் உரசி சென்றதில் பலியானார். அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின்படி, அந்தியூர் போலீசார் 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில், ஆம்புலன்ஸ் உரசியதில் பலியானது தெரிய
வந்தது.
மற்றொரு போதை விபரீதம்
சத்தியமங்கலத்தை அடுத்த ராமபையலுாரை சேர்ந்தவர் தங்கராஜ், 35; மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர். கடந்த, 15ம் தேதி மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் இல்லை என்றதால் பூச்சி மருந்தை குடித்து விட்டார்.
மேல் சிகிச்சைக்காக பெருந்துறை

