/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீஸ் ஜீப் மரத்தில் மோதி டி.எஸ்.பி.,-எஸ்.ஐ., காயம்
/
போலீஸ் ஜீப் மரத்தில் மோதி டி.எஸ்.பி.,-எஸ்.ஐ., காயம்
போலீஸ் ஜீப் மரத்தில் மோதி டி.எஸ்.பி.,-எஸ்.ஐ., காயம்
போலீஸ் ஜீப் மரத்தில் மோதி டி.எஸ்.பி.,-எஸ்.ஐ., காயம்
ADDED : நவ 02, 2025 01:16 AM
கோபி, ஈரோடு மாவட்டம், கோபி அருகே போலீஸ் ஜீப் மரத்தில் மோதி, டி.எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., ஒருவர் காயமடைந்தனர்.
கோபி டி.எஸ்.பி., சீனிவாசன், சிறுவலுார் எஸ்.ஐ., சியாமளா ஆகியோர், ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு சென்று விட்டு, நேற்று மதியம், 12:30 மணிக்கு கல்லுமடை என்ற இடத்தில் பொலீரோ ஜீப்பில் கொளப்பலுார் சாலையை நெருங்கி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சாலையை கடந்த சிறுமி மீது மோதாமல் இருக்க, இடதுபுறமாக திருப்பியபோது, ஓரத்தில் இருந்த மரத்தின் மீது ஜீப் மோதியது.இந்த விபத்தில் ஜீப்பை ஓட்டி வந்த, ஏட்டு செந்தில் என்பவருக்கு காயம் ஏற்படவில்லை. ஆனால் மொக்கை காயம் ஏற்பட்டதால்,
டி.எஸ்.பி.,யும், எஸ்.ஐ.,யும், தனியார் மருத்துவமனையில், புறநோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினர். விபத்துக்குள்ளான டி.எஸ்.பி.,யின் ஜீப், கிரேன் மூலம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

