ADDED : செப் 23, 2026 07:30 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
அருகேயுள்ள சோலாரை சேர்ந்தவர் சங்கர், 54; முட்டை கம்பெனி ஊழியர்.
இவரது வாட்ஸ் ஆப்புக்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இ-கிப்ட் கார்டு
விற்பனைக்கு இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதைப்பெற ஒரு செயலியை
அனுப்பி பதிவிறக்கம் செய்யுமாறு கூறவே அதை செய்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து பார்த்த போது அவரது வங்கி கணக்கில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது.
ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
