தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

ஈரோட்டில் பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

ஈரோட்டில் பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்


ADDED : ஜூலை 10, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு அருகே பிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் திருத்தம் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில், பிளஸ் 2 துணை தேர்வு கடந்த ஜூன் 25ல் துவங்கி 2ல் நிறைவு பெற்றது. பிளஸ் 1 துணை தேர்வு கடந்த 4ல் துவங்கி 11ல் நிறைவு பெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பிளஸ் 2, பிளஸ் 1 விடைத்தாள்கள், ஈரோடு காலிங்கராயன் பாளையத்தில் உள்ள கிரேஸ் மெட்ரிக்

பள்ளியில் திருத்தப்படுகிறது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 7 முதல் நடக்கிறது. 30 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்துவதற்காக வந்துள்ளன. இவற்றை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண் பதிவு செய்கின்றனர். பிளஸ் 1 விடைத்தாள்களும் இம்மையத்துக்கு கொண்டு வரப்படுகிறது.

இதுவரை நடந்த தமிழ், ஆங்கில தேர்வு விடைத்தாள்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அடுத்த வாரத்தில் துணை தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெறும் என, பள்ளிக்கல்வி துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us