ஆரம்பத்திலேயே காது கேளாமை அறிகுறியை கண்டறிவது அவசியம்
ஆரம்பத்திலேயே காது கேளாமை அறிகுறியை கண்டறிவது அவசியம்
ADDED : நவ 11, 2026 07:33 AM

ஈரோடு:தற்போதைய
நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் செவித்திறன் குறைபாட்டை சமாளிக்க
பல்வேறு கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. மிகச்சிறிய வடிவமைப்பில்
காதுக்குள் பொருத்தக்கூடிய கருவிகள், காதுக்கு பின்னால் அணியக்கூடிய
கருவிகள், புளூ-டூத் இணைப்பு கொண்ட கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வகைகள்
உள்ளன. தனிநபரின் செவித்திறன் அளவு, அன்றாட தேவை மற்றும் வாழ்க்கை
முறைக்கு ஏற்ப பொருத்தமான கருவியை தேர்வு செய்வது முக்கியம்.
குறிப்பாக
குழந்தைகளிடம் காணப்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பத்திலேயே
கண்
டறிவது அவசியம். இதனால் அவர்களின் பேச்சு, மொழி வளர்ச்சி மற்றும்
கல்வி முன்னேற்றத்துக்கு உதவியாக அமையும். வயதானவர்களிடம்
ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை கண்டறிந்து சிகிச்சை தருவது,
சமூகத்தினருடன் அவர்கள் சிறப்பாக தொடர்பு கொள்ள உதவும்.சேலம் 4
ரோடு மற்றும் ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில் செயல்பட்டு வரும், ஹியரிங்
எய்ட் சென்டர், செவித்திறன் தொடர்பான தேவைகளுக்கு நவீன தொழில்நுட்ப
தீர்வுகளை வழங்கி வருகிறது. செவித்திறன் தொடர்பான ஆலோசனை,
முன்பதிவுக்கு, 75400-35321 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
