/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எர்த் மூவர்ஸ் அதிபர் லாரி மோதியதில் பலி
/
எர்த் மூவர்ஸ் அதிபர் லாரி மோதியதில் பலி
ADDED : ஜூலை 09, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயத்தை அடுத்த ஓலப்பாளையம், வீரசோழபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 44; ஜே.சி.பி., மற்றும் டிப்பர் லாரி வைத்து தொழில் செய்து வந்தார். வீரசோழபுரத்திலிருந்து காங்கேயத்துக்கு மொபட்டில் நேற்று மதியம் வந்தார்.
காங்கேயம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை, முத்துார் பிரிவு அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.