ADDED : ஜூலை 10, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, மாத்துார் மாதா கோவில் பஸ் ஸ்டாப் அருகில் பயணிகள் நிழற்கூடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி, அந்தியூர் எம்எல்ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் நிழற்கூடம் அமைக்க நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
எம்.எல்.ஏ., வெங்கடாசலம், பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சரவணன், துணை செயலாளர் கண்ணுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

