/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
இன்று கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : மார் 06, 2026 05:51 AM
நாமக்கல்:நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. நாமக்கல், முல்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவால-யத்தில் கூட்டம் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணி-மாறன் தலைமை வகிக்கிறார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய தலைவர் கனிமொழி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும் தொகுதி பார்வையாளர்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், ஊராட்சி பொறுப்-பாளர்கள் மற்றும் அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் வரும், 9-ம் தேதி திருச்சியில் நடக்கும் 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்-லட்டும்' என்ற தலைப்பிலான நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

