/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமெரிக்காவை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
அமெரிக்காவை கண்டித்து இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2026 04:40 AM
ஈரோடு: இந்திய கம்யூ., மற்றும் மா.கம்யூ., கட்சி, சி.பி.ஐ., - எம்.எல்.எல்., சார்பில், ஈரோட்டில் நஏற்று ஆர்ப்பாட்டம் நடந்-தது. அமெரிக்க அதிபர் டிரம்ப், சர்வதேச சட்ட நெறிமுறைகள், கோட்பாடுகளை நிராகரித்து, நாடுகளின் மீது தாக்குதல், இந்திய பொருட்கள் மீது, 500 சதவீத வரி விதிப்பு என செயல்படுவதால் பல நாடுகள் அமைதி இழந்துள்ளன.
அமெரிக்காவை கண்டிப்பதுடன், இந்திய இறையாண்மை, தொழிலை காக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அனைத்து வகை உற்பத்தி, ஏற்றுமதி, தொழில்கள் பாதிக்கும், எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் பிரபாகரன், திருநாவுக்க-ரசு, சின்னசாமி, முருகையா உட்பட பலர் பங்கேற்றனர்.

