ADDED : மார் 15, 2026 07:22 AM
ஈரோடு:ஈரோடு,
மாணிக்கம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்ட
செயலர் பிரபாகரன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈரானுடனான
போரால், இந்தியாவில் கடந்த சில நாட்களாக வீடுகள் மற்றும் வணிக
பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் தட்-டுப்பாடு, விலையேற்றம்
ஏற்பட்டுள்ளது. இதனால் சாதாரண தொழிலாளர் குடிக்கும் டீ முதல் உணவு
பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சென்னை, பெங்களுரு உட்பட
பெருநகரங்களில் பல கடைகளில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தியும்,
குறிப்பிட்ட உணவு மட்டுமே வழங்க முடியும் என்றும் போர்டு
வைத்துள்ளனர். பல கல்லுாரி, வேலை செய்பவர்கள் தங்கும் விடுதிகளை
மூடியுள்ளனர். இதை கண்டித்தும், உரிய நடவ-டிக்கை எடுக்க
வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இ.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த்து.

