தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் நாளை கல்விக்கடன் முகாம்

ஈரோட்டில் நாளை கல்விக்கடன் முகாம்

ஈரோட்டில் நாளை கல்விக்கடன் முகாம்


ADDED : பிப் 26, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள் இணைந்து நாளை காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை கல்லுாரியில் சிறப்பு கல்வி கடன் மேளா நடக்க உள்ளது. புதிதாக கல்லுாரியில் சேரும் மாணவ, மாணவியர், ஏற்கனவே கல்லுாரிகளில் படிக்கும் மாணவர், கல்விக்கடன் பெற இந்த முகாம் நடக்கிறது.

மாணவ, மாணவியர், பெற்றோர் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், பான் கார்டு, ஜாதிச்சான்று, பெற்றோர் ஆண்டு வருமான சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மதிப்பெண் சான்று, மாற்றுச்சான்று, கலந்தாய்வு கடிதம் அல்லது நுழைவு தேர்வு முடிவு, கல்லுாரி ஒப்புதல் கடிதம், கல்லுாரி சேர்க்கை கடிதம், கல்லுாரி கட்டண விபரம், முதல் பட்டதாரி சான்று, உறுதிமொழி சான்று எடுத்து வர வேண்டும். அவற்றை, https://pmvidyalaxmi.co.in என்ற இணைய தளம் மூலம் வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us