/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரீடு சேவை நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்
/
ரீடு சேவை நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்
ரீடு சேவை நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்
ரீடு சேவை நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல்
ADDED : டிச 26, 2024 01:36 AM
கல்வி உதவித்தொகை வழங்கல்
சத்தியமங்கலம், டிச. 26-
சத்தியமங்கலத்தில், ரீடு நிறுவனம் கடந்த, 23 ஆண்டுகளாக குழந்தைகள், பெண்கள், சமுதாயத்தில் பின் தங்கிய மக்கள், பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக பல்வேறு செயல் திட்டங்களை நடத்தி வருகின்றது.
சத்தியமங்கலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 100 பள்ளி, கல்லூரி மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, ரீடு நிறுவனத்தின் இயக்குனர் கருப்புசாமி தலைமையில் நடந்தது. தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன், சமூக ஆர்வலர்கள் ஆனைக்கொம்பு ஸ்ரீராம், பொன்னுசாமி, முத்து, அப்துல்லா, பொன் தம்பிராஜ், சந்திரசேகர், நந்த
குமார், ஜான் டி பிரிட்டோ பள்ளி தலைமை ஆசிரியர் சகாயமேரி, இயக்குனர் கல்பனா அம்பேத்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பெற்றோரை இழந்தவர்கள், ஒற்றை பெற்றோர் உள்ளவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், நம்பியூர், பவானிசாகர், டி.என்.பாளையம், பகுதிகளில் எட்டாம் வகுப்பு முதல் கல்லுாரி வரை படிக்கும், 100 மாணவியருக்கு, இரண்டு லட்சத்து, 26 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
முன்னதாக, திட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டம்மாள் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

