ADDED : மே 23, 2025 12:59 AM
அ நிறம் | அளவு
கோபி, கோபி அருகே மாக்கினாங்கோம்பை பாலத்தின் அருகே, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் கிடப்பதாக, கடத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் பிரவுன் நிறத்தில் பேண்ட், கருநீல நிறத்தில் ஸ்வெட்டர் அணிந்திருந்தார். மாக்கினாங்கோம்பை வி.ஏ.ஓ., சவுபாக்கியவதி புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
